விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் பெயர்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் குறித்து...

News image

மம்மூட்டி, மோகன்லால்

Updated On :24 ஜூன் 2025, 10:42 am

DIN

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.

இறுதியாக, மம்மூட்டி நடித்த பசூக்கா அவருக்கு வெற்றியைக் கொடுத்தது. அதேபோல், மோகன்லாலுக்கு துடரும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, ஹருதயப்பூர்வம் படத்திற்காகக் காத்திருக்கிறார்.

தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இதில் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன் தாரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முதல்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் முடிந்திருந்தது.

இந்த நிலையில், இலங்கையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மோகன்லால், ”நானும் மம்மூட்டியும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கையில் இருக்கிறோம். மிகப்பெரிய படமாக இது உருவாகி வருகிறது. காரணம், ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும் இதில் இணைந்துள்ளனர். படத்திற்கு பேட்ரியாட் (patriot - தேசபக்தன்) எனப் பெயரிட்டுள்ளோம்” என்றதுடன் “இலங்கை சினிமா இயக்குநர்கள் என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடித்துக்கொடுப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மம்மூட்டியும் மோகன்லாலும் மலையாள சினிமாவில் வசூல் நட்சத்திரங்களாக இருக்கும் சூழலில் இப்படம் வணிக ரீதியாக பெரிய சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.