
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் வைபவ் நடித்துள்ள பெருசு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’. இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.
மரணப்படுக்கையில் இருந்த குடும்ப பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் குறித்த துயர நகைச்சுவை கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இதன் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
படம் மார்ச் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.