82 வயதில் மீண்டும் தொகுப்பாளராகும் அமிதாப் பச்சன்!

கோன் பனேகா குரோர்பதியின் 17ஆவது சீசனை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்.
அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்படம்: எக்ஸ் /அமிதாப் பச்சன்
Published on
Updated on
1 min read

கோன் பனேகா குரோர்பதியின் 17ஆவது சீசனை நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும்தொகுத்து வழங்குவதை உறுதிசெய்துள்ளாட்.

கோன் பனேகா குரோர்பதி என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் மூன்று சீஸன்கள் 2000 முதல் 2007 வரை ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2010 முதல் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

3-வது சீஸனை ஷாருக் கான் தொகுத்து வழங்கினார். இதர அனைத்து சீஸன்களின் நிகழ்ச்சிகளையும் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார்.

கடைசியாக 16ஆவது சீசன் ஆக.12இல் தொடங்கியது. உடல் நிலை மோசமானதன் காரணமாக படங்களிலும் பெரிதாக நடிப்பதில்லை.

கடைசியாக ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். அவருக்குப் பதிலாக டப்பிங் வேறு ஒருவர் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

கனவுகளை உயிர்ப்புடன் வையுங்கள்

வதந்திகளுக்கு விடியோ மூலம் பதிலளித்துள்ள அமிதாப் பச்சன் பேசியதாவது:

ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு மீண்டும் ரசிகர்களிடம் அன்பு, இணக்கம், அனைவரது கண்களிலும் வெதுவெதுப்பான பார்வை கிடைக்குமா என யோசிப்பேன். அந்த ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் எனக்கு நான் எதிர் பார்த்ததைவிட அதிகமாகவே கிடைக்கும். தொடர்ச்சியாக இது எனக்கு வந்துகொண்டே இருக்கிறது. நமது நம்பிக்கை, இந்த ஆசை எப்போதும் இதேமாதிரி பிரகாசம் குறையாமல் இருக்க வேண்டும்.

பிரியாவிடை அளிக்கும் தருவாயில் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். நமது முயற்சிகள் யாராவது ஒருவரது வாழ்க்கையத் தொட்டால் அல்லது இங்கு பேசப்படும் வார்த்தை யாருக்காவது நம்பிக்கையை தந்திருந்தால் நமது 25ஆவது ஆண்டு பயணத்துக்கு உண்மையான வெற்றியாக கருதுகிறேன்.

அதனால், பெண்கள், ஆண்களே நான் உங்களை அடுத்த சீசனில் சந்திக்கிறேன். உங்களது கடின உழைப்புகளில் நம்பிக்கையை வையுங்கள். உங்களது கனவுகளை உயிர்ப்புடன் வையுங்கள். நிறுத்தாதீர்கள், மண்டியிடாதீர்கள். நீங்கள் எனக்கு மதிப்பு மிக்கவர்கள். மீண்டும் உங்களை சந்திக்கும் வரை நான் உங்கள் அமிதாப் பச்சன். இந்த சீசனின் எனது கடைசி வார்த்தையாக ஒன்றைச் சொல்லிக்கொண்டு முடிக்கிறேன் - ‘ சுப ராத்திரி'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com