திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

20 ஆண்டுகளுக்குப் பிறகு இசை ஆல்பத்தை வெளியிடும் வில் ஸ்மித்!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது புதிய இசை ஆல்பத்தை அறிவித்துள்ளார்.

News image

வில் ஸ்மித் - படம்: இன்ஸ்டா / வில் ஸ்மித்

Updated On :16 மார்ச் 2025, 2:31 pm IST

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது புதிய இசை ஆல்பத்தை அறிவித்துள்ளார்.

56 வயதாகும் வில் ஸ்மித் 'பேஸ்ட் ஆன் எ ட்ரூ ஸ்டோரி' என்ற புதிய ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

ஆல்பத்திலுள்ள பாடல்கள்.

ஆல்பத்திலுள்ள பாடல்கள். - படம்: இன்ஸ்டா / வில் ஸ்மித்

இந்தா ஆல்பம் வருகிற மார்ச்.28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இது கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புதிய இசை ஆல்பம் வெளியாகிறது.

கடைசியாக 2005இல் ‘லாஸ்ட் அன்ட் பவுன்ட்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்.

ஆஸ்கரில் சர்சை

1980இல் இருந்து இசை ஆல்பங்களை மற்றவர்களோடு இணைந்து உருவாகி வந்தார். பின்னர், 1997இல் தனித்து இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

மார்ச்.28இல் வெளிவரும் இந்த புதிய ஆல்பத்தில் 14 டிராக்குகள் உள்ளன. அதில் ஏற்கனவே வெளியான சில முக்கியமான பாடல்களும் அடங்கியுள்ளன.

தனது மனைவி குறித்து கிண்டல் செய்த கிறிஸ் ராக்கை ஆஸ்கர் விருது விழா மேடையில் சென்று அவரது கன்னத்தில் அறைந்தது மிகவும் விவாதத்துக்குள்ளானது.

ஆர்வமாக இருக்கும் வில் ஸ்மித்

கடைசியாக அவரது நடிப்பில் பேட் பாய்ஸ் படம் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர் வசூலீட்டியதும் குறிப்பிடத்தக்கது.

நக்கல்ஸ் என்ற இணையத்தொடரிலும் நடித்திருந்தார். இந்நிலையில் புதிய ஆல்பம் குறித்து வில் ஸ்மித் பேசியதாவது:

அதிகாரபூர்வமாக சொல்கிறேன். மார்ச்.28ஆம் தேதி 'பேஸ்ட் ஆன் எ ட்ரூ ஸ்டோரி' என்ற ஆல்பம் வெளியாகிறது.

2 வாரங்கள்! இப்போதே தேதியை சேமித்துக்கொள்ளுங்கள். சில காலமாக இதை உருவாக்கி வந்தேன். அதை உங்களுக்குக் காட்ட ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.