வாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

டிராகனுக்கு புரமோஷன் செய்தார்களா டிரம்ப், எலான் மஸ்க்?

அதிபர் டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் டிராகன் படத்துக்கு புரமோஷன் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவுகள்...

டொனால்ட் டிரம்ப் / டிராகன் படம் / எலான் மஸ்க்

Updated On :

சுனிதா வில்லியம்ஸை விண்வெளியில் இருந்து பூமிக்கு கொண்டுவந்து சேர்த்த விண்கலன் மூலம் டிராகன் படத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொழிலதிபர் எலான் மஸ்க்கும் புரமோஷன் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் கேலியான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

டிராகன் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா, சுனிதா வில்லியம்ஸ் தரையிறங்கிய டிராகன் விண்கலன் விடியோவைப் பகிர்ந்ததால், சர்வதேச அளவில் புரமோஷன் பணிகள் நடந்துள்ளதாக ரசிகர்கள் பலர் வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் உள்ளிட்ட 4 பேருடன் இன்று (மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் டிராகன் விண்கலம் பூமிக்கு வந்து சேர்ந்தது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திற்குட்பட்ட கடலில் வெற்றிகரமாக வந்து விழுந்தது. அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 பேரை நாசா பத்திரமாக மீட்டது. இந்த விடியோவை நாசா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

நாசாவின் இந்த முயற்சியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து என்னவொரு நம்பமுடியாத அற்புதமான தருணம் எனப் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்தப் பதிவில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். டிராகன் படத்தின் புரமோஷன் பணிகள் இன்னும் நிறைவடையவில்லையா? என்றும், புரமோஷன் பணிகளில் டிரம்ப்பையும், எலான் மஸ்க்கையும் ஈடுபடுத்தியுள்ளீர்களா? எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

லவ் டுடே படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனுடன் மீண்டும் இணைந்து டிராகன் படத்தை தயாரித்தது. குறைந்த பட்ஜெட்டில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படம், 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.