நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரைத்துறை மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
பாலிவுட்டில் சாதாரண நடிகராக அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நவாசுதீன் சித்திக்.
வித்தியாசமான கதைக்கரு கொண்ட படங்களாகத் தேர்ந்தெடுத்து அதில் நடிப்பிற்கு வேலையுள்ள கதாபாத்திரத்தில் நடிப்பார். ஹிந்தி திரையுலகில் பிரபலமான இவர் தமிழில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது, இவர் நடிப்பில் உருவான கோஸ்டா திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி 1990-ல் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தங்கக் கடத்தலை தடுக்க முயன்ற சுங்க அதிகாரியின் கதாபாத்திரத்தில் நவாசுதீன் நடித்திருக்கிறார்.
படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நவாசுதீன், “பாலிவுட் சினிமாவில் உண்மைத்தன்மை இல்லை. முக்கியமாக, ஹிந்தி திரைப்படங்களில் நல்ல கதைகளும் படைப்பாற்றலும் இல்லை. தற்போது, பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்களை காப்பி அடிக்கின்றனர். வெற்றி பெறுவதற்கான சூத்திரங்களைக் கொண்டு ஹிந்தியில் படங்களை எடுக்க முயற்சிக்கின்றனர். வெற்றிப் பெற்றால் அடுத்தடுத்த பாகங்களுக்குச் செல்கின்றனர்.
கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தில் நவாசுதீன் சித்திக்
மேலும், ஒரே மாதிரியான காட்சிகளையும் திரும்பத் திரும்ப திருடி எடுக்கின்றனர். திருடுபவர்களால் படைப்பாளியாக இருக்க முடியுமா? இதனால், படைப்புத் திறனுக்கான வேலையே இல்லாமல் ஆகிவிட்டது. இப்படியே இருந்தால் நல்ல படங்களைக் கொடுத்த அனுராக் காஷ்யப்பைப் போல பல நடிகர்களும் இயக்குநர்களும் பாலிவுட்டை விட்டு வெளியேறுவார்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆர்யா சொன்னதால் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய சந்தானம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

24 கிராஃப்ட் கற்க கல்லூரி! முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த அல்போன்ஸ் புத்திரன்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சிஜேபி போராட்டம்: இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள்!

ஐகானிக் கோல்ட் அவார்ட்ஸ் 2026 - புகைப்படங்கள்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


