நடிகர் சூர்யாவின் 45-வது படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு கோவை, சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூர்யாவுடன் த்ரிஷா நடனமாடும் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
இந்த நிலையில், இப்படத்திற்கு பேட்டைக் கருப்பன் எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பிரபாஸ், மோகன்லாலின் கண்ணப்பா மேக்கிங் விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சூர்யாவின் கருப்பு பட வெளியீட்டுத் தேதி!
நெட்பிளிக்ஸில் வெளியாகும் கருப்பு?

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?
சூர்யா - 46 பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

