திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மஞ்ஞுமெல் பாய்ஸ் நாயகனின் ஆசாதி ரிலீஸ் தேதி!

நடிகர் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் உருவாகியுள்ள ஆசாதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...

News image

ஆசாதி பட போஸ்டர்கள்.

Updated On :18 மே 2025, 12:30 pm IST

நடிகர் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் உருவாகியுள்ள ஆசாதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழகத்தில் பிரபலமானவர் ஸ்ரீநாத் பாசி. ஆனால், அதற்கு முன்னமே கும்பாலாங்கி நைட்ஸ், ஹோம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழகத்தில் வரும் மே.23ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

ஃபைசல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை சாகர் எழுதியுள்ளார். ஒரே இரவில் நடக்கும் கதையாக இருக்குமென போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ரீநாத் பாசி உடன் லால், ரவீனா ரவி, அபின் பினோ, வானி விஸ்வநாத், சைஜு குரூப் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழகத்தில் மலையாளப் படங்களுக்கு ரசிகர்கள் கூடுதலாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஸ்ரீநாத் பாசி சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியதும் சமீபத்தில் போதைப்பொருள் தாதாவுடன் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.