நாகார்ஜுனாவின் 100ஆவது படம்..! கிங் 100 படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்த நாளில் அவரது 100ஆவது படத்தின் க்ளிம்ஸ் விடியோ குறித்து...

Nagarjuna in the movie King 100.

கிங் 100 படத்தில் நாகார்ஜுனா. - படம்: யூடியூப்/ அன்னபூர்னா ஸ்டூடியோஸ்

Published On :4 வினாடிகள் முன்பு

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்த நாளில் அவரது 100ஆவது படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு கிங் 100 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அன்னபூர்னா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தினை இரா. கார்த்தி இயக்கியுள்ளார். இவர் நித்தம் ஒரு வானம், மேட் இன் கொரியா ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார்.

தேவ்ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடித்த மற்றவர்கள் விவரங்கள் எதுவும் இந்த க்ளிம்ஸ் விடியோவில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகார்ஜுனாவின் பிறந்த நாளில் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மிகவும் ஸ்டைலாக இருக்கும் நாகார்ஜுனாவின் காட்சிகள் கவனம் பெறுகின்றன.

இந்தப் படத்தில் ரூ.50, 000 கோடி ஊழல் செய்து தொழிலதிபர் என காட்டப்படும் காட்சிகள் சுவாரசியத்தை தூண்டுகின்றன. அதில் ”இந்த உலகில் இரண்டே இரண்டு பிரிவினர்தான் இருக்கின்றனர். ஒன்று பணம் இருப்பவன் மற்றொருவன் பணம் இல்லாதவன்” என்பவை கவனத்தை ஈர்க்கின்றன.

இந்தப் படம் வரும் டிச.24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் ஷாருக்கானுடன் மோதவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

King100 first glimpse out: Nagarjuna tells rags-to-riches story in vintage style

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.