வா வாத்தியார் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் டிச. 24 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால், தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் வெளியீட்டிலிருந்து ஜன நாயகன் விலகியதால் பிப்ரவரி வெளியீட்டுக்குக் காத்திருந்த சில திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையைக் குறி வைத்துள்ளன. அதில், நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் ஜன. 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வா வாத்தியார் ஜன. 14 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.