ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயனின் காட்டாளன் பட டீசர்!
நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள காட்டாளன் பட டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் மே மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தில் கவனம் ஈர்த்த துஷாரா ரஜினியின் வேட்டையன், விக்ரமின் வீர தீர சூரன், தனுஷின் ராயனிலும் நடித்து புகழ்பெற்றார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகியுள்ளார்.
க்யூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தை பால் ஜியார்ஜ் இயக்கியுள்ளார். அங்கமாலி டையரிஸ் படத்தில் பிரபலமான ஆண்டனி வர்கீஸ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
பான் இந்திய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு காந்தாரா இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
The teaser of the film Kaattaalan starring actor Antony Varghese has been released and is attracting attention.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

