

நடிகர் தனுஷ் - நடிகை மிருணாள் தாக்குர் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் காதலர் நாளன்று இந்தத் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தனுஷும் மிருணாள் தாக்குரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
சமீபத்தில் அடிக்கடி அவர்கள் எதாவது நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வந்தன.
இந்நிலையில், காதலர் நாள் பிப்.14ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றன.
இருப்பினும் இருவரும் இது குறித்து மறுப்பு அல்லது உறுதி படுத்தாதது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில் கமெண்ட் செய்து வந்ததும் ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியது.
நடிகர் தனுஷ் இயக்குநர் ஐஸ்வர்யா கடந்த 2024 முதல் விவாகரத்து பெற்றார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் கர எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
நடிகை மிருணாள் தாக்குர் கடைசியாக கல்கி, சன் ஆஃப் சர்தார் 2 படங்களில் நடித்திருந்தார்.
நான்கு படங்களில் நடித்து வரும் மிருணாள் தாக்குர், விரைவில் அவரது டெகாயிட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.