மீண்டும் தந்தையாகும் அட்லி!

தந்தையாகவுள்ள செய்தியை அட்லி பகிர்ந்துள்ளார்...
தன் மனைவி, மகனுடன் அட்லி
தன் மனைவி, மகனுடன் அட்லி
Updated on
1 min read

இயக்குநர் அட்லி தன் மனைவி கருவுற்றிருக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகர் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி.

ஹிந்தியில் ஷாருக்கானை இவர் இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பான் இந்திய வெற்றிப்படமானதால், பாலிவுட்டில் அட்லிக்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் துவங்கின. இதனால், மும்பையிலேயே குடியேறியுள்ளார்.

தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

இந்த நிலையில், தன் மனைவி கர்ப்பம் தரித்துள்ளத தகவலை அட்லி பகிர்ந்துள்ளார். நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு வீர் என்கிற ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தன் மனைவி, மகனுடன் அட்லி
சூரியனுக்கு அருகே நட்சத்திரங்கள்... த்ரிஷா - நயன்தாரா!
Summary

director atlee shared his wife pregnant again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com