நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!
/

உடற்பயிற்சி சர்ச்சைக்கு விளக்கமளித்த பேட்மேன் பட நாயகன்!

தி பேட்மேன் படத்தில் எழுந்த உடற்பயிற்சி சர்ச்சைக்கு ராபர்ட் பேட்டின்சன் அளித்த விளக்கம் குறித்து...

News image

தி பேட்மேன் படத்தில் ராபர்ட் பேட்டின்சன். - படம்: வார்னர் ப்ரூஸ்.

Updated On :4 ஜூன் 2026, 2:47 pm IST

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் ‘தி பேட்மேன்’ படத்தில் தன் மீது எழுந்த ‘உடற்பயிற்சி செய்யவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார்.

டிசி படங்களின் வரிசையில் மிகவும் புகழ்பெற்ற ப்ரூஸ் வேன் கதாபாத்திரத்தில் 2021ல் வெளியான பேட்மேன் படத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடித்திருந்தார். இந்தப் படம் மிகவும் மெதுவாக சென்றதாக கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்தப் படத்தில் அவரது உடல் குறித்த விமர்னங்கள் அப்போதே எழுந்தன. நேர்காணல் ஒன்றில், “உடற்பயிற்சி என்பது சலிப்பூட்டக்கூடியது” எனக் கூறியிருந்தார்.

தற்போது, பேட்மேன் 2 படம் தயாரிப்பில் இருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதி 2027-ஆம் ஆண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் ஜிக்யூ மேகசின் நேர்காணலில் பேட்டின்சன் பேசியிருப்பதாவது:

நான் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறேன். அப்படி செய்துமே நான் உடற்பயிற்சி செய்யாதது போலவே இருக்கிறது. காலையில் 3 மணிக்கு எழுந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சி குறித்த நான் நேர்காணலில் சொல்லியது நன்றாக இருக்கிறது என்பதற்காகச் சொல்லியது.

11 வாரங்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தவிருப்பதாக சண்டைப் பயிற்சியாளர் ஒருவர் கூறியிருந்தார். படக்குழு சார்பாக இதை எனக்கு யாருமே தெரியப்படுத்தவில்லை என்றார்.

இந்தப் படத்துக்கு முன்பாக தி ஒடிஸி, டியூன் 3, பிரைம் டைம் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Summary

Robert Pattinson dismisses claims he skipped gym for 'The Batman'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.