தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அனிருத் இசையைப் பயன்படுத்திய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி பதிவில் அனிருத் இசை...

News image

பிரதமர் மோடி , அனிருத்

Updated On :16 ஜூன் 2026, 5:09 pm IST

பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராம் பதிவில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒருவார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். புத்தாக்கம், வா்த்தகம், முதலீடு, நிலையான வளா்ச்சி, பாதுகாப்பு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடா்புகள் குறித்து இதில் விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 15) ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். தலைநகர் பிராடிஸ்லாவாவில் பிரதமருக்கு வந்தே மாதரம் பாடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிராடிஸ்லாவா அரசு மாளிகையில், ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ பிரதமர் மோடிக்கு, ’ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ்' (The Order of the White Double Cross (1st Class)) விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பின்னணி இசை எண்ணற்ற ரீல்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Music composer Anirudh's music has been used in Prime Minister Narendra Modi's Instagram post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.