சின்ன திரை பிரபலங்கள் ஆனந்த் செல்வன் - சியாமந்தா கிரண் திருமணம் கோவையில் நடைபெற்றது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அயலி தொடரில் நாயகனாக நடித்து வருபவர் நடிகர் ஆனந்த் செல்வன். ஆயுத எழுத்து, உயிரே தொடர்களில் நடித்த இவர், நினைத்தாலே இனிக்கும் தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்தத் தொடரில் நடித்து, மக்கள் மனங்களைக் கவர்ந்த ஆனந்த் செல்வன், தற்போது ஜீ தமிழில் அயலி தொடரில் நடித்து வருகிறார்.
இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆயுத எழுத்து தொடரில் நடிகை சியாமந்தாவுடன் நடித்திருந்தார். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. 7 ஆண்டு காதலுக்குப் பிறகு ஆனந்த் செல்வன் மற்றும் சியாமந்தா கிரண் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணத்துக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். ஆனந்த் செல்வன் - சியாமந்தா கிரண் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

ஆனந்த் செல்வன் - சியாமந்தா கிரண் திருமணம் - படம்: இன்ஸ்டாகிராம்
குறிப்பாக, பிக்பாஸ் பிரபலம் பவித்ரா ஜனனி மற்றும் பாக்கியலட்சுமி தொடர் நடிகை ரித்திகா ஆகியோர் ஆனந்த் செல்வன் - சியாமந்தா திருமண புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சின்ன திரையில் நடிகை சியாமந்தா குணசித்திர வேடங்களில் பல தொடர்களில் நடித்துள்ளார். கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, ஆயுத எழுத்து, தென்றல் வந்து என்னை தொடும், பனிவிழும் மலர்வனம், அமுதாவும் அன்னலட்சுமியும், அண்ணா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியலிலும் இவர் நடிக்கவுள்ளார்.
Summary
The wedding of television celebrities Anand Selvan and Syamantha Kiran took place in Coimbatore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











