பிக் பாஸ் இல்லாமல் இயங்கும் பிக் பாஸ் வீடு! விதிகளில் மாற்றமா?
பிக் பாஸ் குரல் இல்லாமல் பிக் பாஸ் வீடு இயங்கவுள்ளது குறித்து...

பிக் பாஸ் 10
பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிக் பாஸ் குரல் இல்லாமல் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான தலைவராக ஜேசன் கெளசி தேர்வு செய்யப்படுள்ளார். துணைத் தலைவராக நடிகை ஷாதிகா உள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் புதிய விதிகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி மாறியுள்ளது. அதாவது, பிக் பாஸ் இல்லாமல் பிக் பாஸ் வீடு இயங்கவுள்ளது.
நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் விதி மீறினாலோ, அநாகரிகமாக நடந்துகொண்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ பிக் பாஸ் குரலாக வந்து வழிநடத்துவார். ஆனால், இந்த வாரம் முழுவதுமே பிக் பாஸ் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பிக் பாஸ் குரல் இனி கேட்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10வது வாரத்தின் முதல் நாளில் தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு பேசிய பிக் பாஸ், வேறு சில காரணங்களுக்காக அடுத்த சில நாள்களுக்கு தனது குரல் கேட்காது என்றும், அதனால் இனி என்னை தொடர்புகொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், போட்டியாளர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும் அதற்காக ஜூனியர் பிக் பாஸை போட்டியாளர்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.
இதன்படி வீட்டின் ஜூனியர் பிக் பாஸ் பொறுப்புக்கு வினோத் பாபு, ஜேசன், அடாவடி அன்சர், டிடிஎஃப் வாசன், ஷாதிகா, தன்யா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் இறுதியில் ஜேசன் - வினோத் பாபு இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் போட்டியாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வினோத் பாபு, ஜூனியர் பிக் பாஸாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வினோத் பாபுவின் குரலில் இனி பிக் பாஸ் வீடு இயங்கி வருகிறது. இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
Bigg Boss house operating without Bigg Boss voiceHave the rules changed?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


