முகநூல் தகவல் கசிவு ரகசியங்களை பேசும் ’தி சோஷியல் ரெக்கனிங்’!
’தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படம் குறித்து...

முகநூல் தகவல் கசிவு ரகசியங்களை பேசும் ’தி சோஷியல் ரெக்கனிங்’! - படம்: விடியோ கிளிப்
ஆரோன் சோர்கின் எழுதி, இணைந்து தயாரித்து, இயக்கிய ‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படம், 'தி சோஷியல் நெட்வொர்க் (2010)’ படத்தின் அடுத்த பாகம் என்றாலும் முந்தைய பாகத்தோடு தொடர்பில்லாத தனிப்படமாகும்.
இந்தப் படம் 2021-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் ஹாகன் மற்றும் ஜெஃப் ஹார்விட்ஸ் ஆகியோரால் வெளிப்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தகவல் கசிவு பற்றிய ரகசியங்களைப் பேசுகிறது. இந்தத் திரைப்படத்தின் உலகளாவிய முதல் லண்டனில் உள்ள கர்ஸன் மேஃபேர் சினிமா திரையரங்கில் நடைபெற்றது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், 2021-ஆம் ஆண்டில் வெளியான அதிரடி புலனாய்வுத் தொடரான 'தி ஃபேஸ்புக் ஃபைல்ஸ்' கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின்(முகநூல்) இளம் பொறியாளரான பிரான்சிஸ் ஹாகன் (மைக்கி மேடிசன்), தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபரான ஜெஃப் ஹார்விட்ஸ் (ஜெரமி ஆலன் ஒயிட்) என்பவரின் உதவியை நாடுகிறார். இவர்கள் இருவரும் இணைந்து மேற்கொள்ளும் ஓர் ஆபத்தான பயணம், இறுதியாக ஃபேஸ்புக் எனும் சமூக ஊடகத்தின் மிக ரகசியமான உண்மைகளை அம்பலப்படுத்துவதில் முடிகிறது.
இவ்வாறாக, 1000-க்கும் மேற்பட்ட முகநூலின் மிக முக்கியமான மற்றும் ரகசிய ஆவணங்களை அவர்கள் வெளியில் கொண்டு வருகின்றனர். இந்த உண்மைச் சம்பவத்தைத்தான் இத்திரைப்படம் விவரிக்கிறது.
தி சோஷியல் ரெக்கனிங் படத்தை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்குகிறது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Summary
‘The Social Reckoning’—written, co-produced, and directed by Aaron Sorkin—is a standalone film that, while serving as a follow-up to ‘The Social Network’ (2010), is not connected to the previous installment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


