FOLLOW US

ON GOOGLE DISCOVER

300 மில்லியன்! 2026-ன் ஹிட் பாடலான முட்ட கலக்கி!

முட்ட கலக்கி பாடல் 30 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது...

Published On :1 செப்டம்பர் 2026, 11:09 am IST

முட்ட கலக்கி பாடல் யூடியூபில் 30 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் கடந்த மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிபெற்ற நிலையில் தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Story image

முக்கியமாக, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பெரிய ஹிட் அடித்தது.

தற்போது, இப்பாடல் யூடியூபில் 30 கோடி (300 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இதனைக் கென் எழுதி, பாடியிருந்ததார். இந்தாண்டில் வெளியான பல தமிழ் பாடல்களில் இப்பாடலே மிகப்பெரிய ஹிட்டை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The 'Mutta Kalakki' song has crossed 300 million views on YouTube.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.