
டோரதி இசை வெளியீட்டு விழா எப்போது?
டோரதி திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்து...

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் இளையராஜா
டோரதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தற்போது தன் 10-வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நாயகியாக நடித்த இப்படத்திற்கு, “டோரதி” எனப் பெயரிட்டுள்ளனர்.
மதுரையைக் களமாக வைத்து உருவான இப்படத்தில் நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தில் கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பாடல்களால் இளையராஜாவை இன்றைய இளைஞர்களும் இசையும் வரியும் சுத்தமாக இருக்கிறது எனப் பாராட்டி வருகின்றனர். மேலும், இப்படத்தில் சில பாடல்கள் இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், டோரதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப். 5 ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இளையராஜாவும் பாடுவார் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Information regarding the audio launch event of the movie 'Dorothy' has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






