சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

திரிசூலி ஆற்றங்கரையில்... நேபாள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்!

பாலிவுட் நடிகர் சோனு சூட் செயலுக்கு குவிந்துவரும் வரவேற்பு குறித்து...

Sonu Sood extends a helping hand to the people of Nepal.

நேபாள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட் - படங்கள்: இன்ஸ்டா / சோனு சூட்

Published On :3 செப்டம்பர் 2026, 1:05 pm IST

பாலிவுட் நடிகர் சோனு சூட் (53 வயது) நேபாள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ததுக்கு சமூக வலைதளத்தில் வரவேற்பு குவிந்து வருகிறது.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.

இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 1,252 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா்கள் 275 போ் உள்பட 4,875-க்கும் மேற்பட்டோர் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி இன்றுடன் 9-ஆவது நாளாகத் தொடர்கிறது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் சோனு சூட் நேற்று நேபாளத்துக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்தார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நினைக்கமுடியாத இழப்புகள், உடைந்த வீடுகள், உடைந்த குடும்பங்கள், எப்போதுக்குமான மாற்றங்களை நிகழ்த்திய திரிசூலி ஆற்றுக்கு அருகில்தான் நின்று கொண்டிருக்கிறேன்.

நேபாளம் தனியாக இருக்காது. நான் இந்த மக்களுடன் இருக்கிறேன். நேபாள மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் அவர்களது வீடுகளை கட்டவும் மீண்டும் குடும்பங்கள் வாழவும் நான் எல்லாவற்றையும் செய்வேன் என்றார்.

பொதுவாகவே சோனு சூட் மக்களுக்கு அதிகமான நிதியுதவிகளை வழங்குவார். இந்த நேபாள மக்களுக்கான உதவிகளுக்கு இந்திய மக்கள் மட்டுமின்றி நேபாள மக்களும் அதிகமான வரவேற்பை அளித்து வருகிறார்கள்.

Summary

Standing here at the Trishuli River, nepal is not alone says Actor sonu sood

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.