
ஜெய், பிரியங்கா மோகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
ஏஜிஎஸ் - 29 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்...

ஜெய், பிரியங்கா மோகன்
நடிகர்கள் ஜெய், பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகிஸ்த நிறுவனமான ஏஜிஎஸ் கடந்த சில ஆண்டுகளாக நல்ல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. லவ் டுடே, டிராகன், பிளாஸ்ட் என வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள நிறுவனம் என்பதால் இவர்கள் அடுத்தடுத்து தயாரிக்கும் திரைப்படங்களின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தங்களுடைய 29-வது திரைப்படத்தை அறிவித்துள்ளது. எம். எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்தில் நடிகர்கள் ஜெய், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.
கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக்கூடிய இப்படத்தில் பிரியங்கா மோகன் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
The announcement for a new film starring actors Jai and Priyanka Mohan has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







