சீனாவில் டிரம்ப் - ஜின்பிங் - புதின் முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது!வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

மிஸ் பண்ண வேண்டாம்! டோன்ட் டிரபிள் த டிரபிள் – திரை விமர்சனம்!

ஓடிடியில் வெளிவந்துள்ள தெலுங்குத் திரைப்படமான பகத் பாசிலின் டோன்ட் டிரபிள் த டிரபிள் திரை விமர்சனம்...

நடிகர் பகத் பாசில் குழந்தை நட்சத்திரம் சாரா

Updated On :

டைட்டில்தான் டிரபிள்!

4/5

வெள்ளித் திரையில் கடந்த மாதம் வெளியான தெலுங்குத் திரைப்படம் டோன்ட் டிரபிள் த டிரபிள். தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிக் காணக் கிடைக்கிறது (தமிழ், மலையாளம் டப்பிங் இருக்கின்றன).

படத்தைப் பார்க்கத் தொடங்கும்போதே, என்னடா டைட்டில் இது? என்ன சொல்லப் போறாய்ங்க? இதுல பகத் பாசில் வேற, அதீதமான கற்பனையும் நகைச்சுவைகளும் கலந்துகட்டிய கத வேறயாம், படத்தைப் பத்தி இதுவரை எங்கேயும் அவ்வளவா கேள்விப்படவில்லையே என்று ரொம்பவே யோசனையாகத்தான் இருந்தது.

தெலுங்கில் முதல் முதலாக நாயகனாக மலையாளத்து பகத் பாசில் நடித்திருக்கும் திரைப்படம். பாகுபலி எஸ். எஸ். ராஜமௌலிதான் வழங்கியிருப்பவர். தயாரிப்பு தொடர்புடைய இன்ன பிறர்.

பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கும் ஆதரவற்ற ஆம்புலன்ஸ் டிரைவர் சூரி (பகத் பாசில்) ஒரு சந்தர்ப்பத்தில் தன் நண்பனுடன் சேர்ந்து, தாதாவான அஸ்லாமிடம் (மகேஷ் மஞ்ச்ரேக்கர்) எக்குத்தப்பாக சிக்கிக்கொண்டு இரு நாள்களில் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டிய நெருக்குதலுக்கு ஆளாகிறார்.

சுமாரான மந்திரவாதியான நண்பனை வைத்துக்கொண்டு ஏதாவது பணக்கார வீட்டுக் குழந்தையைக் கடத்திப் பணம் பெறும் முயற்சியில், எதிர்பாராமல் சிறுமி திவ்யாவையும் (சாரா பலேக்கர்) அவளுடைய நாய் ஸ்னூப்பியையும் கடத்துகிறார். மந்திரத்தால் தான் காணாமலாக்கிவிட்டதாகக் கருதும் பெற்றோரை, மந்திரவாதி உடையணிந்திருக்கும் சூரியை மந்திரவாதியென்றே கருதி, மீட்டுத் தருமாறு வேண்டுகிறார் திவ்யா.

தற்செயலாகத் தனக்குக் கிடைத்த (திவ்யாவுக்கு அவருடைய தாய் தந்த) ஒரு மந்திர சக்தியுள்ள கழுத்துச் சங்கிலி டாலர் காரணமாக திவ்யாவைப் பார்க்க, உரையாட, உறவாட முடிந்தவராகிறார் சூரி. ஆனால், திவ்யாவோ சிறுமியின் ஆவி! நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் அதுவே சூரிக்குத் தெரிகிறது.

சூரிக்குப் பணம் கிடைத்ததா? திவ்யாவின் பெற்றோருக்கு என்ன நேர்ந்தது? திவ்யாவின் பெற்றோர் கிடைத்தனரா? காவல்துறை எங்கே வந்துசேருகிறது? ஆவி  திவ்யாவுக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் சூரிக்குமான நட்பு என்னவாகிறது? கடைசியில் என்ன முடிவு என்று சென்றடைகிறது கதை.

பகத் பாசில் பகத் பாசில்தான், கொஞ்சமும் குறை வைக்கவில்லை. நகைச்சுவைகளில் தொடங்கி, காவல்நிலையத்தில் அடிபடும்போதும், திவ்யாவுடன் பேசுகிறபோதும் உடல்மொழியும் சரி, முகபாவங்களும் சரி, நடிப்பும் சரி. வேற லெவல். அதுவும் தன்னுடனிருக்கும் திவ்யா ஆவி என்றறியும்போது சூப்பர்.

அதீத கற்பனை - நகைச்சுவைக் கதை என்பதாகக் குறிப்பிட்டாலும் அதுமாதிரியே சென்றாலும்கூட, படத்தின் கிளைமேக்ஸில் ரசிகர்களைக் குறிப்பாக, சின்னஞ்சிறுசுகளை, அழ வைத்துவிடுகின்றனர்.

Listicle image

முழுப் படத்தையும் பகத், சாரா பலேக்கர், நாய் ஸ்னூப்பி ஆகியோர் தாங்குகின்றனர். சின்னச் சின்ன குறைகள் சில இருந்தாலும் இயக்குநர் சசாங்க் யெலட்டி சிறப்பாகச் செய்திருக்கிறார்.

வெறுமனே குழந்தைகளுக்கான படம் என்றெல்லாம் இந்த டிரபுளை ஒதுக்கிவிட முடியாது. வேண்டுமானால், 2.30 மணி நேரம் ஓடுகிற இந்தப் படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம், பெரியவர்களும் போர் அடிக்காமல் பார்ப்பதற்காக.

பிரமாண்ட பாகுபலி எடுத்த இயக்குநர் ராஜமௌலி முற்றிலும் மாறுபட்ட, எளிய ஆனால், எல்லாருக்குமான இப்படியொரு படத்தை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சில காட்சிகளில் மந்திரத்தால் ஒரே நேரத்தில் எல்லாரும் காற்றில் பறந்துபோய் விழுகிறார்கள். அடிபடுகிறார்கள். கட்டடங்கள் இடிகின்றன. ஆனால், இவையெல்லாம் நிஜத்திலேயே நடப்பதாகக் காட்சிகளை வைத்து நம்ப முடியாதனவற்றை நடத்திக்காட்டும் ‘பிரமாண்ட இயக்குநர்கள்’, போனால் போகிறதென இப்படிக் கொஞ்சம் பணத்தை இறக்கி இயல்பான படங்களை எடுப்பது பற்றியும் சிந்திக்கலாம்.

முதலில் நமக்குத் தோன்றியதைப் போலவே படத்தில் டைட்டில்தான் பெரிய மைனஸ். திரையரங்குகளில் படம் சரியாக ஓடாததற்கு ஒருவேளை இதுவேகூட முக்கிய காரணமாக இருக்கலாமோ? குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க வேண்டிய படம் டோன்ட் டிரபிள் த டிரபிள். ஸ்னூப்பி சூப்பர்.

A review of the Telugu film 'Don't Trouble the Trouble', starring Fahadh Faasil, which has been released on an OTT platform...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.