கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

விவேகமற்ற வேகம் ஏனோ?

முதல் உலகப்போர் முடிவுற்றபோது பிரிட்டிஷ் பொருளாதார மேதை

News image
Updated On :11 அக்டோபர் 2012, 10:41 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

முதல் உலகப்போர் முடிவுற்றபோது பிரிட்டிஷ் பொருளாதார மேதை ஜான் மேனார்டு கீன்ஸ், ""அமைதிக்காலப் பொருளாதாரம்'' என்ற தன் பிரபலமான நூலில், பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜ், பிரெஞ்சு பிரதமர் கிளமன்ஸ், அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 1918 - 19 பாரிஸ் அமைதி மகாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட போதும் ஐரோப்பிய - அமெரிக்க ஏகாதிபத்திய அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்துவிட்டு ஜெர்மனியை ஆதரித்துப் பேசிய கீன்ûஸ அன்று பத்திரிகை உலகம் ""அரைப்பைத்தியம்'' என்று எழுதியது. பாரிஸ் அமைதி மகாநாட்டு முடிவுக்குப் பின்  உருவானதுதான் ஐ.நா. சபை. அது வேறுவிஷயம்.

 1936-இல் கீன்ஸ் எழுதிய ""வேலைவாய்ப்பு - வட்டி - பணம்'' என்ற நூல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இரண்டாவது உலகப்போர் ஏற்பட்டபோது உலகத் தலைவர்கள் மாறினர். தொடக்கத்திலிருந்தே கீன்ஸ் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், இரண்டாம் உலகப் போருக்குப் பின் வீழ்ச்சியுற்ற அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தலைநிமிர வைத்த ""நியூ டீல்'' கொள்கைக்குப் புத்துயிர் வழங்க கீன்ûஸ அமெரிக்காவுக்கு வரவழைத்துத் தனக்கு முக்கியப் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். பொருளாதார வளர்ச்சிக்கு அரசுத் தலையீட்டையும், கல்வி - சமூகப் பாதுகாப்புக்கான முதலீடுகளையும் முதலாளித்துவ நாடுகளில் முன்மொழிந்த பெருமை கீன்ஸýக்கு உண்டு. 1930-களில் அமெரிக்காவில் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

 "நியூ-டீல்' அதை மாற்றியது. மாபெரும் வீழ்ச்சியால் அங்காடிப் பொருளாதாரம் இயங்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம், முதலீடு இன்மை - ஆகிய பிரச்னைகளுக்கு கீன்ஸ் கண்டுபிடித்த மருந்துதான் "பற்றாக்குறை பட்ஜெட்', "கடன்' ஆகியவை. அவர் கருத்துப்படி வீழ்ச்சியுற்ற பொருளாதாரத்தைத் தலைநிமிர்த்த அரசு கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டும்.

 கீன்ஸ் வழங்கிய பொருளாதாரத் திட்டத்தில், ""குறைந்த முதலீடு குறைந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும். குறைந்த வேலைவாய்ப்பு குறைந்த நுகர்வு. குறைந்த நுகர்வு குறைந்த அங்காடி - இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியுறுகிறது எனப்பட்டது.

 ரூஸ்வெல்ட்டின் "நியூ-டீல்' பொருளாதாரத் திட்ட வெற்றிக்கு அரசுக் கடன், பற்றாக்குறை பட்ஜெட் வழிவகுத்துக் கொடுக்க கீன்ஸ் காரணமானார். கீன்ஸ் கண்டுபிடித்த ஒரு வார்த்தை ""முதலீடுகளின் அனிமல் ஸ்பிரிட்'' அதாவது ""முதலீடுகளின் அசுர பலம் வேலைசெய்து, கூடுதல் நுகர்வால் உற்பத்தி உயர்ந்து, பெறக்கூடிய லாபத்தால் முழு வேலைவாய்ப்பு ஏற்பட்டு, பற்றாக்குறை சமனாகும். வட்டியுடன் கடனையும் அடைத்துவிடலாம். சேமிப்பு உயரும்'' - என்பதெல்லாம் கி.பி.2000 வரை சரிதான்.

 உலகமயமாதல் நிகழ்ச்சியின் தொடக்கம் சற்று சரியாக இருப்பினும், போகப்போகத் தெரிந்த உண்மை எதுவெனில், கீன்ஸ் தத்துவம் செயல்படுவதும் ஓர் எல்லைக்குள் என்பதுவே. எல்லைமீறிப் பொதுக்கடன் உயர்ந்தால் நாடே திவாலாகும். வேலைவாய்ப்புகள் குறையும். முதலீடுகள் அசுரபலத்துடன் வேலை செய்யாமல் வளர்ச்சி ஒரு நிலைக்குமேல் உயராது.

 கிரீஸ் திவாலானது உலகறியும். ஐரோப்பியப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி. அமெரிக்காவிலும் வீழ்ச்சி. இப்படிப்பட்ட எதார்த்தங்களை உணராமல் இந்தியப் பிரதமரின் இப்போதைய வேகம் விவேகமாகத் தோன்றவில்லை. திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்தவன் ஏதேதோ பிதற்றலாம், புலம்பலாம். முதலீடுகளின் "அனிமல் ஸ்பிரிட்' வேலைசெய்ய சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அமைச்சரவையின் பெரும்பான்மை பலத்தைவைத்து பிரதமர் அனுமதித்துவிட்டதன் மூலம் சாதித்துவிடலாம் என்று எண்ணுவது அவருடைய பொருளாதாரப் புலமை - அப்படி எதுவும் இருந்தால் - அதற்குக் களங்கம் கற்பிப்பதுபோல் உள்ளது.

 உலகமயமாதலில் உள்ள இந்தியப் பங்களிப்பால் வளர்ச்சி குன்றிப்போய்விட்டது. பணவீக்கத்தால் பலமிழந்த ரூபாய் நாணயச் செலாவணியில் தோன்றியுள்ள பற்றாக்குறை வர்த்தகம் காரணமாக ரூபாயின் மதிப்புக் குறைந்தால் டாலர் விலை உயர்ந்து 8,000 கோடி ரூபாய் நஷ்டம் தருவதாக உள்ளதாம். ஆகவே வால்மார்ட்டை வரவழைத்து "அனிமல் ஸ்பிரிட்டை' ஊட்டி டாலர்களைப் பெற வேண்டுமாம். டீசல் விலையை உயர்த்தி நாணயச் செலாவணி நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டுமாம்.

 இப்படிப் பேசுவதெல்லாம் பிரதமரின் பொருளாதாரச் செயலாளர் எழுதிக் கொடுத்துள்ள பாடம். 21-9-2012 அன்று உறக்கத்திலிருந்து எழுந்த பிரதமர், ""அன்னிய முதலீடுகளை வரவழைப்பேன், வளர்ச்சியை உயர்த்துவேன். அப்பணியை வால்மார்ட் செய்யும்'' என்று கூறினார்.

 1991-ஆம் ஆண்டை நினைவுபடுத்தித் தன் பழைய புகழை மலரும் நினைவுகளாகப் பெருமிதம்கொண்டு இந்திய ரூபாயின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குரியதாக மாற்றிய கடன் ஆலோசனை நிறுவனங்களை மூடி, ஸ்டாண்டர்டு அண்ட் பூர் ஆகியவற்றைக் கண்டபடி திட்டித் தீர்த்தார். மேற்படியார்களின் தவறான மதிப்பீட்டால் அன்னிய முதலீடு நின்றுவிட்டதாகவும் குறைபட்டுக் கொண்டார்.

 கீன்சின் வாரிசாகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும் மன்மோகன் சிங்குக்கு, இந்திய எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல் வேகம் காட்டுவது, தவறு என்று தோன்றாதது வேடிக்கைதான். இந்தியாவில் சில்லறை என்ற பெயரில் பன்முக வணிகத்தை வால்மார்ட்டுக்கு விட்டுக்கொடுத்துள்ளதையும், டீசல் விலையை உயர்த்தியதையும் அமெரிக்கப் பத்திரிகைகள், அமெரிக்க டி.வி. விமர்சனங்கள் வழங்கும் பாராட்டுகள் - அதாவது பழைய மன்மோகனின் வீரதீரமான, தைரியமான, கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தம் என்று பாராட்டி மன்மோகனைக் குளிர வைத்துள்ளன. இந்த "ஐஸ்' வேலை ஆபத்தானது. இந்தக் குளிர்ச்சியில் மயங்கிவிட்டால் இந்தியப் பிரதமருக்குக் குளிர் ஜூரம் வந்துவிடும். ஏழை,  நடுத்தர மக்களின் வயிற்றெரிச்சலால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தோல்வி உறுதியாகிவிடும்.

 2001 - 2009 காலகட்டத்தில் அன்னிய முதலீடு - அன்னிய நிறுவன முதலீடு ""ஹாட்மணி'' என்ற சுட்ட டாலர் ரொக்கம், சுடாத டாலர் கடன் எல்லாம் வளர்ச்சிக்கு வேலை செய்திருக்கலாம். 2010 - 2020 காலகட்டம் வேறு. இன்று பிரதமர் கடைப்பிடிக்கும் அணுகுமுறையில் வர்த்தகப் பற்றாக்குறை போன்ற பல்வேறு வரவு - செலவு சமனற்ற நிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அன்னிய முதலீடுகள் வந்தால் போதும் என்று மட்டுமே எண்ணப்படுகிறது.

 இந்த நிலை வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் அதிகமாக்கும். இன்று உற்பத்திக் கருவுள்ள முதலீடுகள் தங்கமாகவும், டாலர் ரொக்கமாகவும், நிலத்திலும் அடைக்கலமாகிவிட்டன. அன்னிய முதலீடுகளால் தொய்ந்துவிட்ட பங்குச் சந்தை சூடு பிடிக்கும் என்று எண்ணப்படலாம். ஆனால், நிஜமாக யூக வணிகமே ஓங்கும். நிஜ உற்பத்தி உயராது. அப்படியே அன்னிய முதலீடுகள் வந்தாலும் அன்னிய நிறுவனங்கள் நமது மன்மோகன் சிங்கைப்போல் சோனியா சொன்னால் தலையாட்டும் நல்ல பிள்ளைகளாகவா இருப்பார்கள்? வங்கியில் நுழைவார்கள்.

 இன்சூரன்ஸ் - பென்ஷன் நிதியில் கைவைக்க அனுமதிக்குமாறு நெருக்குவார்களே? மருந்து விஷயங்களில் காப்புரிமைச் சட்டம் குணத்தைக் காட்டும். நமது பாரம்பரிய "ஜெனிட்டிக் செல்வங்கள்' கொள்ளை போகும். உணவு மானியத்துக்கு உலை வைக்கவும் நெருக்கலாம்.

 வளர்ச்சி குன்றிய இந்தியாவின் பிரச்னைகளைத் தீர்க்க "உள்ளே' நோக்க வேண்டுமே தவிர, "வெளியே' நோக்குதல் தவறு. உள்ளூர்த் தொழில் உற்பத்தி ஏன் சரிந்தது? காரணம் மத்திய - மாநில அரசின் நிர்வாகச் சீர்கேடுகள். ஊழல் தலைவிரித்தாடுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கவனிக்கப்படுவதைப்போல் கிராமத்துச் சாலைகள் கவனிக்கப்படுவது இல்லை. தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் வேண்டும். மின்உற்பத்தி குறைந்துவிட்டதால் மின்வெட்டு காரணமாக எல்லாத் தொழில்களும் படுத்துவிட்டன. மின்உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி உற்பத்தியில் ஊழல். நிலக்கரி வயல்களைத் தனியார்களுக்குப் பட்டா போட்டு வழங்கியும்கூட வெட்டப்பட்ட நிலக்கரி எங்கே போயிற்று?

 சுரங்கங்கள் எல்லாம் பொதுத்துறைக்குரியது. அள்ளப்படும் நிலக்கரிக்கு விலை இல்லை. வெட்டப்படும் கருங்கல்லுக்கு விலை இல்லை. பாக்சைட்டுக்கு விலை இல்லை. ஆற்று மணலுக்கு விலை இல்லை. பாட்டில் தண்ணிக்கு விலை இல்லை. யார் வேண்டுமானாலும் அள்ளி விற்கலாம். அரசுக்கு வரவேண்டிய வருவாயைத் தின்று தொந்திபோட்ட அரசியல் சுயநலமிகள் அன்னிய நாட்டு நிறுவனங்களை வரவழைத்துக் கடைபோட ஒப்புதல் வழங்கியுள்ளது வேதனையளிக்கின்றது. மம்தா பானர்ஜிக்கு இருந்த துணிவு ஏனோ மற்றவர்களுக்கு இல்லை.

 வால்மார்ட் வந்து இங்கு கடைகள் போடுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லையாம். வால்மார்ட் கடைகளுக்கு ஜெர்மனியில் நஷ்டம். தென்கொரியாவில் நஷ்டம் என்று பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் லாபகரமான சூழ்நிலை இருப்பதால்தானே நஷ்டமடைந்த நிறுவனம் இங்கு வரத் துடிக்கிறது! இன்றல்ல, நேற்றல்ல. இந்த ஆண்டு தொடக்கத்தில் சுவிட்சர்லாந்து - இந்தியக் கறுப்புப்பணம் பதுங்கியுள்ள நாட்டில் - தாவோஸ் என்ற அழகிய நகரம் உள்ளது. "யு.எஸ். எய்ட்' பொருளாதார மகாநாடு அங்கு கூட்டப்பட்டது. அந்த மகாநாட்டில் இந்தியப் பிரதிநிதி மட்டுமல்ல. யு.எஸ். எய்டின் நிர்வாக அலுவலரான ராஜீவ் ஷாவுடன் பங்கேற்ற ரகுராமன் ராஜன் அப்போது சிகாகோவின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் அனைத்துலக நிதிப் பேராசிரியர். இவரும் தாவோஸ் மகாநாட்டில் பங்கேற்றிருந்தார். உலக வேளாண் - உணவு வர்த்தக முதலைகளான வால்மார்ட், டூபாண்ட், கார்கில், கோகோ கோலா, பெப்சி, மிட்லாண்ட், மான்சென்டோ, கிராஃப்ட் புட், சின்ஜெண்டா, யூனிலிவர் போன்ற 17 நிறுவனங்களும் அழைக்கப்பட்டு உலகப் பசியைப் போக்க உலக உணவு உரிமையை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

 உலக நாடுகளின் உணவுத்துறை பொது நிதியில் செயல்படுவதை மாற்றித் தனியார் உரிமை - உலக உணவு பகாசூரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள முடிவை தாவோசில் ராஜீவ் ஷா அறிவித்தபோது, அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை.

 அவசர கோலத்தில் அள்ளித்தெளிப்பதுபோல இந்தியப் பிரதமரின் இந்த விவேகமற்ற முடிவால் அரசியல் சுயநலமிகளுக்கு எதுவும் சில்லறைகள் டாலர் டாலராகக் கிட்டலாம். அவருக்கு என்ன கவலை? பதவி காப்பற்றப்படும். சோனியா சூழ்ச்சி வெற்றிபெற்றுவிட்டது. வாழ்க பாரதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.