தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பிறந்த நாள் தேசிய அளவில் கொண்டாடப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருப்பது, தமிழர்கள் அனைவருமே மகிழ்வும் பெருமையும் கொள்ள வேண்டிய செய்தியாகும்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்யின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்று இறுநூறு நாள்கள் கடந்து விட்ட நிலையில், அவரது அரசின் செயல்பாடுகள், குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கோ, சில கட்சிகளுக்கோ சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருந்ததாகக் குற்றம் சுமத்தமுடியாதபடி ஒட்டுமொத்தமாக நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தியதாக அமைந்திருக்கின்றன என்பதே உண்மை.
நமது நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீத மக்கள் 35 வயதுக்குக் கீழ் உள்ள இளைஞர்களாக திகழ்வதே இந்தியாவின் வலிமை என்று கூறியுள்ள பிரதமர், அத்தகைய இளைஞர்களும் மாணவர்களும் நன்கு படிக்க வேண்டும். அவர்கள் திறமையும் தகுதியும் வளர்வதற்கு சிறப்பு கவனம் கொடுத்திட வேண்டும் என்கின்ற முனைப்பில் அதற்காக ஒரு அமைச்சகத்தையே உருவாக்கி உள்ளார்.
இளம் பெண்களும் தகுதி வாய்ந்த கல்வி அறிவு மிக்கவர்களாக திகழ வேண்டும். தாய் - தந்தையர் குழந்தைகளை நெறிமுறையோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு சுலபமாக கிடைக்க வேண்டும். நாட்டின் உற்பத்தியும் பெருக வேண்டும்.
உலகின் மூலைமுடுக்குகளிலெல்லாம் இந்தியாவின் தரமிக்க பொருள்கள் செல்ல வேண்டும். இந்திய ஆசிரியர்களும் உலகெங்கும் சென்று பணிபுரியும் நிலை வரவேண்டும் - இப்படியெல்லாம் தனது விருப்பங்களை அன்றாடம் பதிவு செய்து வருகிறார்.
பொதுத் தேர்தலுக்கு முன்பாக தலைநகர் டெல்லியில் உள்ள பிரசித்தமான ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸில் பேசினார். அது இந்தியா முழுவதும் இளைஞர்களால் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து பல கல்லூரிகளிலும், ஐ.ஐ.டி.களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அத்தகைய நிகழ்ச்சிகளிலெல்லாம் பல புதிய கருத்துகளை முன் வைத்தார். ஆசிரியர் தினத்தன்று நாடெங்கிலும் உள்ள மாணவர்களோடு நேரடியாக உரையாற்றினார். மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமும் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
பாகிஸ்தான் நமது ஜவான்களைக் கொன்று அட்டகாசம் செய்தது, இந்திய இளைஞர்கள் மனதில் ஆழமான காயத்தை உருவாக்கி இருந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால், இன்றைய பிரதமர் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தார். சீனாவோடு நட்புறவோடு இருந்தாலும் எல்லைப் புற விஷயங்களில் கறாராக இருக்கிறார். இவையெல்லாம் இந்திய பிரதமர் மீது மக்கள் மனதில் ஒரு தைரியமான வடிவத்தை ஏற்படுத்தியுள்ளன.
இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு, நல்ல பொருளாதாரம், நல்ல எதிர்காலம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். குஜராத்தை வளப்படுத்தியது போல இந்தியாவெங்கும் ஒரு முன்னேற்றத்தை மோடி ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது.
மார்ட்டின் லூதர் கிங் இன வேறுபாடுகளில் இருந்து தனது மக்களை மீட்க ஐ ட்ஹஸ்ங் ஹ ஈழ்ங்ஹம் என்று கூறுவார். அதே போன்று வங்ள் ரங் இஹய், வங்ள் ரங் ரண்ப்ப் என்று மோடி அவர்களும் நிச்சயமாக நாட்டின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதி பூண்டுள்ளார். "இந்தியாவில் தயாரிப்போம்' (ஙஹந்ங் ண்ய் ஐய்க்ண்ஹ) திட்டத்தின் மூலம் இந்தியாவின் தொழில் உற்பத்திக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.
நரேந்திர மோடி தகவல் தொழில்நுட்பத்தினை ஒரு மாற்றத்திற்கான சாதனமாகக் கருதுகிறார். இது மக்களை இணைக்கிறது. தொலைவில் உள்ள விடுபட்டுப் போன பகுதிகளுக்குக்கூட செய்திகளை கொண்டுச் செல்கிறது. மக்களை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அழைத்துச் செல்கிறது. மக்களை அரசோடு சேர்க்கிறது. புதிய அறிவியல் சார்ந்த பல கண்டுபிடிப்புகளையும், வளர்ச்சிகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
எனவே, வருகின்ற காலத்தில் இந்தத் தகவல் தொழில்நுட்பம் இந்திய வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் என்று நம்புகிறார். எனவே, நரேந்திர மோடி முகநூல், டுவிட்டர் மூலமாக நாள்தோறும் பல கோடிக்கணக்கான இளைஞர்களோடு உரையாடி வருகிறார். இன்றைய தினம் உலக அளவில் சமூக வலைதளங்கள் மூலமாக மிக அதிக அளவில் பின்தொடரும் ஆதரவாளர்களை நமது பிரதமர் பெற்றுள்ளார்.
அதேபோன்று செல்போன் மூலமாக பிரதமரோடு நேரடியாக உரையாடும் நிலையை உருவாக்கி இருக்கின்றார். ஈண்ஞ்ண்ற்ஹப் ஐய்க்ண்ஹ மூலமாக பல புதிய சாதனைகளை சாதிக்கும் ஆர்வத்தோடு விளங்குகிறார். முதன் முறையாக ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசக் கூடிய 3 ஈ ஏர்ப்ர்ஞ்ழ்ஹம் முறையை தேர்தல் காலத்தில் பிரபலப்படுத்தி நாட்டு மக்களை ஈர்த்துள்ளார்.
மோடியின் கடின உழைப்பு பல மாநிலங்களைச் சேர்ந்த, பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. அவர் பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்பும், ஏற்ற பின்பும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பாராட்டத்தக்கவை.
தேர்தலுக்கு முன்பு ஏராளமான பொதுக்கூட்டங்கள், பேரணிகள், தேநீர் கடையில் நடத்திய கலந்துரையாடல்கள், ஒற்றுமைக்கான நடைப்பயணங்கள் என்று ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
மோடி பிரதமரான பிறகு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். அங்கு பலமுறை சென்று வந்துள்ளார். தமிழகத்து மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கை அரசு மரண தண்டனை விதித்தவுடன், இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக ஐந்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதே போன்று "ஜன் தன் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு வங்கி சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தந்துள்ளார். வங்கி நடைமுறைகளையே கண்டறியாத கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அக்கிராமத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி முன்மாதிரி கிராமமாக உருவாக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார். "தூய்மை இந்தியா' என்ற முயற்சியினை மேற்கொண்டு சுத்தமான சுற்றுப்புற சூழ்நிலைகளை உருவாக்கி வருகிறார்.
ரயில்வே துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்து, இந்திய ரயில்வே துறையை சர்வதேசத் தரத்திற்கு முன்னேற்ற முனைந்துள்ளார். அண்டை நாடுகளான பூட்டான், நேபாளம், மியான்மர் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கு அடிகோலியுள்ளார். அண்மையில் நேபாள தலைநகர் காத்மாண்டில் நடைபெற்ற "சார்க்' அமைப்புகளின் 18-ஆவது உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியின் பேச்சு உலகின் பல தலைவர்களாலும் பாராட்டப்பட்டது.
அங்கு அவர் ஆற்றிய உரை வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், கடந்த 2008-ஆம் ஆண்டு அதே நாளில் நிகழ்த்தப்பட்ட மும்பை தாக்குதலை நினைவு கூறும் விதமாக அமைந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.
பயங்கரவாதம் என்பது தெற்காசிய பிராந்தியத்துக்கு மட்டுமல்ல உலகத்துக்கே பெரும் சவாலாக உள்ளதை கவலையோடு தெரிவித்தார். அவரது அனைத்து திட்டங்களிலும் மக்கள் பங்காற்றுவதற்கு அழைப்பினை விடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அரசாங்கத்தினுடைய செயல்பாடு விரைவாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் வரவேண்டும் என்பதில் கண்டிப்பாக உள்ளார். நாம் தில்லியில் உள்ள அரசு அலுவலகங்களுக்குச் செல்றால் இந்த வியத்தகு மாற்றத்தைக் காணலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக மக்களுக்கு வளர்ச்சிக்கான புதிய எல்லைகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதேபோன்று, ஊழல் இல்லாத நிர்வாகம், லஞ்சம் இல்லாத அரசாங்கத் துறை இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
நமது நாட்டு இளைஞர்கள் ஜாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு புத்துணர்ச்சியோடு விளங்குகிறார்கள். அவர்களை முன்னிறுத்தி தேசத்தின் ஒட்டு மொத்தமான வளர்ச்சியைப் பற்றி பல கருத்துகளை மோடி பதித்து வருகிறார்.
தனக்கு 125 கோடி மக்களின் முழுமையான முன்னேற்றம்தான் முக்கியம் என்று கூறி வருகிறார். இத்தகைய நல்ல நோக்கங்கள் இருப்பதால்தான் எல்லோரும் அவரோடு கலந்து நாட்டின் எதிர்காலம் சிறப்போடு இருக்க வேண்டும் என்று உழைக்க முன்வருகிறார்கள்.
இளைஞர்களின் இதயத்தில் அழுத்தமான ஓர் இடத்தைப் பிடித்துள்ள நமது பிரதமர் இந்த நாட்டின் அரசியலை ஜாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் என்று கூறினால் அது மிகையல்ல!
கட்டுரையாளர்: கூடுதல் செயலர், நாடாளுமன்ற பா.ஜ.க. அலுவலகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.