பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தொடர் மழையிலும் நிரம்பாத திருவொற்றியூர் கோயில் தெப்பக்குளம்

திருவொற்றியூர்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவொற்றியூரில் சாலைகள், தெருக்களில் எல்லாம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் பெருமை வாய்ந்த தியாகராஜர் திருக்கோயில் தெப்பக்குளம் தண்ணீரின்றி பு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:18 pm

முகவை க.சிவக்குமார்

திருவொற்றியூர்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவொற்றியூரில் சாலைகள், தெருக்களில் எல்லாம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் பெருமை வாய்ந்த தியாகராஜர் திருக்கோயில் தெப்பக்குளம் தண்ணீரின்றி புதர் போல் காட்சியளிக்கும் நிலை பொதுமக்களை வருத்தமடையச் செய்துள்ளது.

 மயிலாப்பூர், திருவல்லிக்கேணியைப் போன்று திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளமும் பழமை வாய்ந்த சிறப்புடையது. ஆனால், அந்தக் குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டு நீர்வரத்துகளின் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் பெய்யும் மழையால் அவை நிரம்பி வருகின்றன. குளத்துக்கு நீர்வருவதற்கு பல்வேறு வழிகள் இருந்தும் திருவொற்றியூர் தெப்பக்குளம் மட்டும் நிரம்புவதே இல்லை. காரணம் நீர்வரத்து வழிகள் அனைத்தும் குப்பைகளால் அடைபட்டுள்ளன.

 இது குறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டதன் பேரில் வடக்குமாடவீதி, சன்னதி தெருவில் பல லட்சம் செலவில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டன. போதிய பராமரிப்பின்மை, கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கால்வாய் முழுவதும் குப்பைகளும், மண்ணும் கலந்து அடைந்து தூர்ந்துள்ளன. மழைக் காலத்துக்கு முன்பே இவற்றைத் தூர்வாரி இருந்தால், இந்த ஆண்டாவது குளத்துக்கு தண்ணீர் வந்திருக்கும்.

 தூர்வாரப்பட்ட குளம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களின் தொடர்ச்சியான உழவாரப்பணிகளால் குளம் தூர்வாரப்பட்டு தண்ணீரை நிரப்ப தயார் நிலையில் இருந்தது.

 குளத்தை தூர்வாரிட, இக்கோயிலின் தீவிர பக்தையான பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் ரூ. 10 லட்சம் அளித்திருந்தார். இவ்வாறு பொதுமக்கள் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கோயில் நிர்வாக அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோரின் அலட்சியப் போக்கினால் குளம் சீர்கேடு அடைந்து புதர்போல் காட்சியளிக்கிறது.

 கழிப்பிடமாக மாறிவிட்டது: குளத்தில்தான் தண்ணீர் இல்லை என்றால் குளத்தின் நான்கு புறமும் பராமரிப்பின்றி கழிப்பிடங்களாக மாறிவிட்டன. கிழக்குக் கரையில்தான் ஈமச் சடங்குகள் நடத்தும் இடம் உள்ளது. அப்பகுதியில் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டிய அவலநிலை என்கிறார் சமூக ஆர்வலர் நீலகண்டன்.

 இது குறித்து திருவொற்றியூர் பாரதி பாசறையின் தலைவர் டாக்டர் மா.கி. ரமணன் கூறியது: வரலாற்றுச் சிறப்புடைய நகரம் திருவொற்றியூர். அதிலும் இந்த தெப்பக்குளம்தான் நகரின் அழகு. தண்ணீர் எளிதாக வந்து சேரும் வகையில் தாழ்வான இடத்தில்தான் குளம் அமைந்துள்ளது. நான்கு வீதிகளிலிருந்து வரும் நீர்வரத்துப் பாதைகளை சீர்படுத்தினாலே குளம் நிரம்பிவிடும். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் அதிகாரிகளிடம் மன்றாடுகிறோம். ஆனால் அதிகாரிகள்தான் மாறிவிடுகின்றனர். அவலநிலை மட்டும் மாறவே இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.