சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது: தேர்வில் வெற்றி பெற்றார்ல் தான் மதிப்பு அதிகம். கஷ்டப்படாமல் யாரும் ஜெயிக்க இயலாது. ஐம்புலன்கள்தான் செல்வம். அதில் காதில் கேட்கும் செல்வம் அழியாது. எது நமக்கு வரவில்லையோ, அதை விடாதே. அதை அடைய முயற்சி செய். எழுத்து, பேச்சு, படிப்பு, விளையாட்டு, நடனம் எதுவானாலும் சரி. நான் 8-ம் வகுப்பில் பேச்சுப் போட்டியில் தோல்வியடைந்தேன். அதிலேயே பயிற்சி எடுத்து இன்று பட்டிமன்றதப் பேச்சாளராக உயர்ந்துள்ளேன். வீடு வீடாக செய்தித்தாள் போட்ட டாக்டர் அப்துல்கலாமை, இன்று அனைத்து பத்திரிக்கைகளிலும் போடுகிறார்கள். அந்த அளவிற்கு அவர் விடா முயற்சியுடன் உழைத்து உயர்ந்துள்ளார் என்றார் அவர்.