கேரளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், பொது மேடையில் விவாதத்துக்கு வருமாறு விடுத்த சவாலை முதல்வர் பினராயி விஜயன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆட்சியில் கட்டப்பட்ட அளவுக்குகூட கடந்த 10 ஆண்டுகளில் வீடுகளை இடது ஜனநாயக முன்னணி அரசு கட்டவில்லை என்று விமர்சனத்தை முன்வைத்தார்.
மேலும், கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வருடன் திறந்தவெளி விவாதத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாக அவர் சவால் விடுத்தார்.
இந்த நிலையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ‘எல்டிஎஃப் ரிப்போர்ட் கார்டு’ என்ற பெயரில் வெளியிட்ட பினராயி விஜயன், இதுபற்றி விவாதிக்க எதிர்க்கட்சியினர் தயாராக இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்ட சில நிமிடங்களில் பதிலளித்த சதீசன், ”முதல்வரின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன். நேரத்தையும் இடத்தையும் முதல்வரே தீர்மானிக்கட்டும். முடிவை மக்கள் தீர்மானிக்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகின்றன.
மூன்றாவது அணியாக உருவெடுத்திருக்கும் பாஜகவுடன் காங்கிரஸ் மறைமுக கூட்டணியில் இருப்பதாக ஆளுங்கட்சியும், சபரிமலை தங்க முறைகேடு வழக்கில் பாஜகவுடன் மார்க்சிஸ்ட் சமரசம் செய்து கொண்டதாக காங்கிரஸும் மாறிமாறிக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இருவரும் திறந்தவெளி விவாதத்துக்கு தயார் எனத் தெரிவித்திருப்பது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Kerala: Leader of the Opposition Challenge for Debate; Chief Minister Pinarayi Accepts!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!
பொய்ப் பிரசாரத்தால் இடது முன்னணியை வீழ்த்த முடியாது! பினராயி விஜயன்

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


