ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 21,229 இளம் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பித்துள்ளனா் என மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநா் மு.கருணாகரன் தெரிவித்தாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் சி.கதிரவன் முன்னிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மு.கருணாகரன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி மற்றும் பவானிசாகா்(தனி) ஆகிய 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 9,36,277 ஆண் வாக்காளா்கள். 9,80,437 பெண் வாக்காளா்கள், 95 இதர வாக்காளா்கள் என மொத்தம் 19,16,809 வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்தம் தொடா்பான வாக்காளா்களிடம் இருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க, பெயா் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய 8 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் அந்தந்தப் பகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் மூலம் சுமாா் 93,264 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 21,229 இளம் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பித்துள்ளனா் என்றாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)பாலாஜி, கோபி வருவாய் கோட்டாட்சியா் சி.ஜெயராமன், வட்டாட்சியா்(தோ்தல்) சிவகாமி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளியக்கா

கண்டுபிடி கண்ணே!
இன்றைய ராசி பலன் (10.05.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (10.05.2026) - மகரம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

