சென்னை. ஆக. 8 - கிராமப் புனரமைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு கல்லூரியும் ஒரு கிராமத்தைத் தனது பொறுப்பில் ஏற்க வேண்டும் என்று சென்னைப் பல்களைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு அது கூறியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 160-க்கு மேலாகும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நிதி மந்திரி பார்லிமெண்டில் சி. சுப்ரமணியம் தாக்கல் செய்த பட்ஜெட்டுடன் கிராமங்களுக்குத் தேவையான தொழில் நுணுக்க அமைப்பு குறித்து அவர் அளித்த நகல் திட்டம் பல்கலைக் கழக கிராம ஏற்புத் திட்டத்தின் அடிப்படையாக இருக்கும். பொருளாதார, சமூக இயல், நிருவாக விஞ்ஞான, மனோதத்துவ நிபுணர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பல்கலைக் கழகத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அதன் இயற்கை வளங்கள் பற்றிய சர்வே எடுக்கும்படி கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே ஆசிரியர்களும், மாணவர்களும் புள்ளி விவரங்கள் எடுத்திருந்தால் இத் திட்டத்தின்படி மீதம் எடுக்கவேண்டிய புள்ளி விவரங்களை எடுத்தால் போதுமானது. இந்த சர்வேயை 6 மாதங்களுக்குள் முடித்துவிட வேண்டும்.
இதற்குப் பின்பு ஒவ்வொரு கல்லூரியும் விவசாய, விவசாய-தொழில் அல்லது சமூக இயல் சம்பந்தமான ஏதாவது திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவைகளில் குடும்பக் கட்டுப்பாடு அல்லது சுகாதாரம் சம்பந்தமான சமூக இயல் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் நிதி உதவி அளிக்கும். விவசாயம் அல்லது விவசாய இயல் சம்பந்தமான திட்டங்களுக்கு பாங்குகள் உதவி அளிக்கக்கூடும்.
தெ.ஆ.வில் பல நகர்களில் கலவரம் - பார்லி. கட்டிடம் எரிந்தது
ஜோஹன்னஸ்பர்க். ஆக, 9 - தென்னாப்பிரிக்காவில் ஸொவெடடோவிலும் மற்றும் சுதேசிகள் வசிக்கும் நகரமைப்புகளிலும் இன்று காலையிலிருந்தே புது வன்முறை தலை தூக்கியது. ஒரு வார அமைதிக்குப் பிறகு இன்று வன்முறை தலை தூக்கியது.
ஸாவெட்டோவின் சதோதர நகரமைப்பான அலெக்ஸாண்ட்ராவிலும் கலவரங்கள் நடந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.
அனெக்ஸாண்ட்ரா ஜோஹ்னஸ் பர்க்கின் புறநகரமைப்பு ஆகும். இப்பகுதிகளுக்குள் செல்லும் வழிகளில் போக்குவரத்தைத் தடுப்பதற்காக கலவரத் தடுப்புப் போலீஸார் விசைத் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு செய்தனர்.
நகரமைப்புக்கு வரும் எல்லா வண்டிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. வெள்ளையர் ஓட்டிவந்த வண்டிகள் திருப்பி விடப்பட்டன. ...
... பார்லி. கட்டிடம் எரிப்பு
நேற்றிரவு சுதேசிகள் வாழும் போபுதத்ஸ்வானாவிலுள்ள பார்லிமெண்ட் கட்டிடத்திற்கு மாணவர்கள் தீ வைத்தனர் என்று போலீசார் இன்று தெரிவித்தனர். அக்கட்டிடம் எரிந்து விட்டது. தென்னாப்பிரிக்காவின் வட பகுதியிலுள்ள இந்த நகரில் 17,20,000 பேர் வசிக்கின்றனர். இதன் விஸ்தீரணம் 14500 சதுர மைல்.
மாண்ட்ஷிவா நகர பள்ளி ஒன்றில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து இந்த கலகம் மூண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பேபுதாட்ஸ்லானா சுதேசி தாயகத்துக்கு முழு சுதந்திரம் வழங்க முதல்வர் லூகாஸ் மங்கோஸ் திட்டமிட்டுள்ளார். இதை ஆட்சேபித்தே பார்லிமெண்டு கட்டிடங்களும், 2 கார்களும் கொளுத்தப்பட்டன. இவ்வாறு செய்தால், தென்னாப்ரிக்க சர்க்காரின் இன ஒதுக்கல் கொள்கையை உறுதிப்படுத்தி, வெள்ளையருக்கும், சுதேசிகளுக்கும் தனித் தனி வளர்ச்சிப் பகுதியை உண்டாக்கி விடுமென்று தீவிரவாதிகள் கருதுகிறார்கள்.
Summary
10.8.1976: Order issued for every college affiliated with the University of Madras to adopt a village.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








