நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

இன்றைய மருத்துவ சிந்தனை: மாதுளை

தொண்டைப் புண், தொண்டை வலி குணமாக மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • மாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
  • மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை (1) அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.
  • தொண்டைப் புண், தொண்டை வலி குணமாக மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.
  • ஆண்மைக் குறைபாடு நீங்க மாதுளம் பழத்தை, இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
  • மூலத்தால் உண்டான புண் குணமாக மாதுளம் பழத் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவி வந்தால் மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாகி, ரத்தக் கசிவும் நிற்கும்.
  • காதில் சீழ் வருவது நிற்க மாதுளம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, அதை சூடுபடுத்தி ஆறிய பிறகு காதில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் காதில் சீழ் வருவது நிற்கும்.
  • சளித்தொல்லை நீங்க மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவந்தால் சளித் தொல்லை தீரும்.
  • மலச்சிக்கல்  பிரச்சனை தீர தினமும் ஒரு மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
  • எலும்பு மற்றும் பற்கள் உறுதியாக மாதுளம் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் எலும்பு, பற்கள் உறுதியாகும்.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.