/

இதயம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்து

இந்த சூரணம் இதயம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்தாகும்.

News image

இதயம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்து

Updated On :7 ஏப்ரல் 2021, 7:40 am

தினமணி

தேவையான பொருள்கள்

வெண்தாமரை     -  250 கிராம்

சுக்கு              -  100 கிராம்

ஏலக்காய்     -   75 கிராம்

ஓரிதழ் தாமரைப் பொடி  - 100 கிராம்

செய்முறை

முதலில் வெண்தாமரை இதழ்களை வாங்கி சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் உலரவைத்துக் கொள்ளவும். சுக்கை மேல்தோல் நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும். ஏலக்காயை ஒருபாத்திரத்தில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரிதழ் தாமரைப் பொடி நாட்டுமருந்துக்கடையில் கிடைக்கும் அதனை வாங்கி வைத்துக்கொள்ளவும். மேற்கூறிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தூளாக்கி  நன்கு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் இதயம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சாப்பிட்ட பின்பு சிறிது நேரம் கழித்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.