சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை: இனி ஆன்லைனிலும் பதிவு செய்யலாம்

மாற்றுத் திறனாளிகள், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது கட்டணத்தில் சலுகை பெறும் வசதி இனி ஆன்லைனில் கிடைக்கும்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:44 pm

பி. அன்புசெல்வன்


மாற்றுத் திறனாளிகள், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது கட்டணத்தில் சலுகை பெறும் வசதி இனி ஆன்லைனில் கிடைக்கும்.

தெற்கு ரயில்வே, மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை அறிவித்து சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வசதி ஆன்லைனில் கிடைத்துள்ளது. இதுவரை டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே சலுகைக் கிடைக்கும் நிலை இருந்து வந்தது.

ரயில்வேயால் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் எண்ணைப் பயன்படுத்தி ஐஆர்சிடிசி இணையதளத்தில் இனி டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதியில், ஒரு மாற்றுத் திறனாளியும், அவருடன் வருபவருக்கும் சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி இணையதளத்தின் முதல் பக்கத்திலேயே மாற்றுத்திறனாளி என்ற பெட்டியை டிக் செய்துவிட்டு பிறகு பயணம் செய்ய வேண்டிய ரயிலை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அங்கே அடையாள அட்டை எண் மற்றும் சில தகவல்கள் கேட்கப்படும். இவற்றை அளித்து ரயில்வே அறிவித்த கட்டணச் சலுகையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.