இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பேரவைக்குச் செல்லாமல் இசை நிகழ்ச்சியில் நடனமாடிய மாண்டியா எம்எல்ஏ அம்பரீஷ்

கர்நாடக சட்டப்பேரவையில் மிகக் குறைந்த வருகைப் பதிவோடு உலா வரும் மாண்டியா காங்கிரஸ் எம்எல்ஏ, பேரவைக்குச் செல்லாமல் இசை நிகழ்ச்சியில் நடனமாடிய விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 5:40 am

DIN

மாண்டியா: கர்நாடக சட்டப்பேரவையில் மிகக் குறைந்த வருகைப் பதிவோடு உலா வரும் மாண்டியா காங்கிரஸ் எம்எல்ஏ, பேரவைக்குச் செல்லாமல் இசை நிகழ்ச்சியில் நடனமாடிய விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ மலவள்ளி ஹச்சே கௌடா அமர்நாத் என்ற அம்பரீஷ் தான் அந்த புகழுக்குரியவர். என்னவென்றால், இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் இன்று வரை வெறும் 4 முறை மட்டுமே சட்டப்பேரவையில் தலைகாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் மிகக் குறைவான வருகைப் பதிவு கொண்டவர்களின் பட்டியலில் அம்பரீஷ்தான் முதல் இடத்தில் உள்ளார். அதாவது, கர்நாடக சட்டப்பேரவையின் 15 கூட்டத் தொடர்களில் 220 நாட்கள் பேரவை செயல்பட்டுள்ளது.  ஆனால் அம்பரீஷ் வெறும் 4 நாட்கள் மட்டுமே அவைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று 300 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவை, 113 உறுப்பினர்களுடன் தொடங்கியது. பல இருக்கைகள் காலியாக இருந்தது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில், அம்பரீஷ், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இசைக் கலைஞர்களுடன் நடனமாடும் விடியோ காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. 

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அம்பரீஷ், சட்டப்பேரவைக்குச் செல்லாமல், இப்படி நடனமாடிக் கொண்டிருப்பது குறித்து கடும் விமரிசனங்களும் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.