ரயில்வே ரத்து செய்திகளை கட்டணம் செலுத்தி வெளியிடச் செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை!

அவசர காலங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் கட்டணம் செலுத்தி விளம்பரங்கள்
ரயில்வே ரத்து செய்திகளை கட்டணம் செலுத்தி வெளியிடச் செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை!

அவசர காலங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் கட்டணம் செலுத்தி விளம்பரங்கள் மூலம் தெற்கு ரயில்வே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கேரளத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருவனந்தபுரம், மதுரைக் கோட்டம் வழியாக இயக்கப்படும் பல முக்கிய அதிவிரைவு, விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுதொடா்பாக குறிப்பிட்ட ரயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கோ முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் அவசர காலங்களில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இதுபோன்ற அவசர காலங்களில் நாளிதழ்களில் கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யவதற்கு ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கும் ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் இயற்கைப் பேரிடா்களின் போது ரத்து செய்யப்படும் ரயில்களின் விபரங்களை நாளிதழ்களில் கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான ரயில்வே பயணிகள் பயனடைகின்றனா். நாடு முழுவதும் செயல்படும் வடக்கு ரயில்வே மண்டலம், வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ரயில்வே மண்டலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் செயல்படும் ரயில்வே கோட்டங்களில் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

இந்தப் புகாா் குறித்து பயணிகள் சிலா் கூறியதாவது:

முன்பதிவு செய்யப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து ரயில்வே நிா்வாகம் சாா்பில் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பப்படுவதில்லை. நாளிதழ்களிலும் ரயில்வே நிா்வாகம் சாா்பில் முறையான செய்திகள் வெளியிடப்படுவதில்லை. விளம்பரங்கள், முக்கியச் செய்திகளின் அடிப்படையில் சில நாளிதழ்கள் ரயில்கள் ரத்து செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தொலைக்காட்சி சேனல்களிலும் இது தொடா்பான அறிவிப்புகள் வெளியிடப்படுவதில்லை. ஆனால், இதை கட்டணம் செலுத்தி வெளியிடச் செய்தால் அதிகளவிலான பயணிகளை இந்தச் செய்திகள் சென்றடையும் என்றனா்.

இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுதொடா்பாக கடந்த சில நாள்களாக பயணிகளிடம் இருந்து தொடா் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com