இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

உ.பி.யில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் இடையே மீண்டும் கூட்டணி: காங்கிரஸுக்கு இடமில்லை

வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இக்கூட்டணியில் காங்கிரஸை அக்கட்சிகள் சேர்க்கவில்லை.
இதுகுறித்து அக்கட்சி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் அக்கட்சிகள் வெற்றி பெற்றன.
இருப்பினும், அக்கட்சிகள் தனித்தே செயல்பட்டு வந்தன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டன. இத்தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று, 3 மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது.
இந்தத் தேர்தலின் முடிவில், காங்கிரஸுக்கு ஆட்சியமைக்க சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் ஆதரவு தெரிவித்தன. எனினும், 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு பதவியேற்பு நிகழ்ச்சிகளில் அக்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து, தில்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி பேசியபோது, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரஸுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றார். இதற்கு சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் பதில் தெரிவிக்கவில்லை.
மறுபக்கத்தில் வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்து, இருகட்சிகள் இடையே கூட்டணி ஏற்படுவது உறுதியாகியுள்ளது. சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட இருகட்சிகளைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளையும் பங்கீடு செய்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
இதுவரை நடத்திய பேச்சுவார்த்தையின்படி உருவாக்கப்பட்ட திட்டத்தில், பகுஜன் சமாஜுக்கு 38 தொகுதிகள், சமாஜவாதிக்கு 37 தொகுதிகள், அஜித் சிங்கின் ஆர்எல்டி கட்சிக்கு 3 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சியுள்ள அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
சமாஜவாதிக்கான 37 தொகுதிகளில் நிஷாத் கட்சி, அமைதி கட்சி ஆகியவற்றுக்கு சில தொகுதிகளை அகிலேஷ் யாதவ் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி அவர் அத்தொகுதிகளை விட்டுக் கொடுத்தால், எஞ்சியுள்ள தொகுதிகளில் மட்டுமே சமாஜவாதி போட்டியிடும். அதேநேரத்தில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடும். இதனால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் கைகளே ஓங்கும். இருப்பினும், பாஜகவை தோற்கடிக்கும் திட்டத்துடனும், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, தங்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அக்கட்சிகள் கைகோப்பது என முடிவு செய்துள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.