அமிர்தசரஸ்: பஞ்சாபில் நிராங்காரி சாமியார் ஆசிரமத்தில் நடந்த குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஆதிவால் கிராமத்தில் நிராங்காரி என்னும் சாமியாரின் ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த 18 ம் தேதி, 200-க்கும் மேற்பட்ட மக்கள், பிரார்த்தனைக்காக கூடியிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஆசிரம வளாகத்துக்குள் புகுந்தனர்.
பின்னர் அங்கு கையெறி குண்டை வீசி விட்டு அவர்கள் தப்பியோடினர். அந்த குண்டு வெடித்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த, 10 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கையெறி குண்டை வீசிய ஒரு நபரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக புதனன்று முதல்வர் அம்ரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
கையெறி குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ அமைப்பு மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வீசப்பட்ட குண்டு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை குண்டுகள்தான் காஷ்மீரிலும் ராணுவத்தினர் மீது வீசப்படுகிறது.
சம்பவத்தில் தொடர்புடைய முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். வெகுவிரைவில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்படுவான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸுக்கு விமானங்கள் வாங்கியதில் ஊழல்: ராஜபட்சவுக்கு சம்மன்
கண்காட்சி நடத்தி போலி தயாரிப்புகள் விற்பனை: ஒருவா் கைது

சபரிமலை வழக்கு: மனுதாரா்தான் நாட்டின் தலைமை அா்ச்சகரா? உச்சநீதிமன்றம் காட்டம்?

முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு?
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


