இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புல்வாமாவில் துப்பாக்கிச்சண்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இந்திய விமானப்படையின்ர் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

News image
Pulwama Jammu And Kashmir
Updated On :1 ஏப்ரல் 2019, 4:41 am

DIN


புல்வாமாவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கவாதிகளை சுட்டுக்கொன்றனர் பாதுகாப்புப்படையினர்.  

பாகிஸ்தானில் இந்திய விமானப்படையின்ர் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இதனிடையே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று காலை ரஜோரி மாவட்டம் நவுசாரா எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து சிறிய ரக வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் லசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுக்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கிள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.