இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய நாளை வரை தடை நீட்டிப்பு 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்,  ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய நாளை வரை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2019, 1:59 pm

DIN

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்,  ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய நாளை வரை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது 

அதேசமயம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப்பிரிவு தனியாக ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கில் செவ்வாய் வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், அமலாக்கப்பிரிவு சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ப.சிதம்பரத்தை புதன்கிழமை வரை அமலாக்கப்பிரிவு கைது செய்யத் தடை விதித்தனர். அத்துடன் சிபிஐ கைதை ரத்து செய்யக்கோரும் சிதம்பரத்தின் மனுவும் நாளை இந்த மனுவுடன் சேர்ந்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கத்தினை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.