இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜம்முவில் இந்தியாவின் எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்? வெளியானது அதிர்ச்சித் தகவல்! 

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.

News image
ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.சிங் பதவுரியா
Updated On :4 அக்டோபர் 2019, 10:50 am

DIN

புது தில்லி: கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் பகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியன்று இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தபட்டது. அதே மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட புலவாமா  தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளிடையே தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வந்த சூழ்நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப் படையின் வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பு தில்லியில் வெள்ளியன்று  நடைபெற்றது.இதில் விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.சிங் பதவுரியா கலந்து கொண்டு பேசினார்  அப்போது இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை ஒன்றின் மூலமாகத்தான் எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டர் ஜம்முவில்  தாக்கி வீழ்த்தப்பட்டுள்ளது. இது நாம் செய்த மிகப்பெரிய தவறாகும். இதுதொடர்பாக ராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது நம்முடைய மிகப்பெரிய தவறு என்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே தருணத்தில், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.