/

பிரதமருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி

உத்தரப் பிரதேசத்தில் 16 வயது சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
உத்தரப் பிரதேசத்தில் 16 வயது சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு 18 பக்கம் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை
Updated On :19 ஆகஸ்ட் 2020, 6:35 am

DIN

சாம்பல்: உத்தரப் பிரதேசத்தில் 16 வயது சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு 18 பக்கம் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்ட 74வது சுதந்திர தினத்தன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பப்ராலா பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதிவைத்துள்ளார். 

அதில், சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊழல், மரங்களை வெட்டுவது குறித்து எழுதப்பட்டுள்ளது. நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களின்போது பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முதியவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். முதியவர்களை அவர்களது பிள்ளைகளே ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகின்றனர் என்று தமது கடிதத்தில் சிறுமி எழுதிவைத்துள்ளார்.

இது தங்கள் சிறுமியின் கடைசி ஆசையாக இருந்துள்ளது என்றும், இந்த கடிதத்தை பிரதமரிடம் சேரும்படி உதவ வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.