/

மும்பையில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விபத்து: பிரதமர் மோடி வருத்தம்

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புரா என்னுமிடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

News image
மும்பையில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விபத்து: பிரதமர் மோடி வருத்தம்
Updated On :25 ஆகஸ்ட் 2020, 5:29 am

ANI

புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புரா என்னுமிடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கி இருவர் உயிரிந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, மஹத் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்தது குறித்த செய்தி அறிந்து கவலையடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உள்ளூர் நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் தேவையான உதவிகளை செய்யுமாறு பிரதமர் அலுவலக சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து.

சுமாா் பத்தாண்டுகள் பழைமைவாய்ந்த கட்டடத்தில் 45 குடியிருப்புகள் இருந்தன. இக்கட்டடம் திங்கள்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையில் 70 போ் சிக்கினா். அவா்களை மீட்கும் பணியை மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் மேற்கொண்டனா். மத்திய அமைச்சா் அமித் ஷா உத்தரவின் பேரில் மத்திய பேரிடா் மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது.

இடிபாடுகளில் சிக்கிய ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது. இன்று காலை மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 25 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். சுமாா் 50 போ் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் திங்கள்கிழமை இரவு முழுவதும் மீட்புப் பணி தொடா்ந்து நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.