இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பேச்சுவார்த்தையில் அமித் ஷா தலையீடு: விவசாயிகளுடன் இன்று திடீர் சந்திப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்கின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2020, 12:04 pm

DIN


வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நாளை (புதன்கிழமை) 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் விவசாயிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. நாடு தழுவிய முழு அடைப்பும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, இருதரப்புக்கு இடையிலான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விவசாயிகள் தரப்பில் இன்று அமித் ஷாவைச் சந்திக்கவுள்ளதாக விவசாயத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாரதிய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் இதுபற்றி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"இன்று இரவு 7 மணிக்கு உள்துறை அமைச்சருடன் சந்திப்பு இருக்கிறது. நாங்கள் தற்போது சிங்கு எல்லைக்குப் புறப்படுகிறோம். அங்கிருந்து புறப்பட்டு உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறோம்" என்றார்.

முன்னதாக, போராட்டத்தின் தொடக்கத்தில் அமித் ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து நிபந்தனை விதித்தார். அதை ஏற்க மறுத்த விவசாயிகள், வேளாண் துறை, உள்துறை அமைச்சரின் வரம்புக்குள்பட்டதல்ல என்று கூறி அவரது அழைப்பை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.