இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து ஆலோசனை: விவசாயத் தலைவர்

​அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2020, 3:00 pm

DIN


அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் 14-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, டிசம்பர் 9-ம் தேதி 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு அமித் ஷாவுடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராகேஷ் டிக்கைட் முன்பு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து ராகேஷிடம் சற்று முன்பு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.