இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டம்: ஹரியாணா விவசாயிகள் குழு

​புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹரியாணாவைச் சேர்ந்த 29 விவசாயிகள் அடங்கிய குழு இன்று (சனிக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
தில்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
Updated On :12 டிசம்பர் 2020, 4:41 pm

DIN


புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹரியாணாவைச் சேர்ந்த 29 விவசாயிகள் அடங்கிய குழு இன்று (சனிக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரதிய விவசாய சங்கத்தின் ஹரியாணா மாநிலத் தலைவர் குனி பிரகாஷ் தலைமையில் 29 விவசாயிகள் அடங்கிய குழு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை இன்று சந்தித்தனர். அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சரிடம் ஆதரவுக் கடிதத்தை சமர்பித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு குனி பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "சட்டங்களை திரும்பப் பெற்றால் நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அனைவருக்கும் போராடுவதற்கு உரிமை உண்டு. அவர்களுக்கு போராட உரிமை இருக்கும்போது, எங்களுக்கும் போராட உரிமை இருக்கிறது. நாங்கள் 3 சட்டங்களுக்கும் ஆதரவானவர்கள். 

ஆனால், இந்தப் போராட்டம் இடதுசாரிகளால் வழிநடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் அரசியல் சாயம் பூசிக்கொண்டுள்ளது. இந்த 3 சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்" என்றார் அவர்.

ஹரியாணாவிலிருந்து அமைச்சர் தோமரைச் சந்திக்கும் இரண்டாவது விவசாயிகள் குழு இது. முன்னதாக டிசம்பர் 7-ம் தேதி ஒரு விவசாயிகள் குழுவினர் தோமரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.