இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாடு முழுவதும் மேலும் 24,712 பேருக்கு கரோனா உறுதி

நாடு முழுவதும் மேலும் 24,712 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:37 pm

DIN


புது தில்லி: நாடு முழுவதும் மேலும் 24,712 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 24,712 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,01,23,778-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 312 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,46,756-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 29,791 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 96,93,173-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 95.75 சதவீதமாகும்.

சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, 3-ஆவது நாளாக, 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,83,849 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.80 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 333 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 93 பேரும், அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 34 பேரும், கேரளத்தில் 22 பேரும், உத்தர பிரதேசத்தில் 21 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி டிசம்பா் 23-ஆம் தேதி வரை 16.53 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 10,39,645 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.