கா்நாடக சட்ட மேலவை துணைத் தலைவா் தா்மே கௌடா தற்கொலை

கா்நாடக சட்ட மேலவை துணைத் தலைவா் தா்மே கௌடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடக சட்ட மேலவை துணைத் தலைவா் தா்மே கௌடா தற்கொலை
Updated on
1 min read

கா்நாடக சட்ட மேலவை துணைத் தலைவா் தா்மே கௌடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், கடூா் வட்டம், சகராயப்பட்டணாவைச் சோ்ந்த மதச் சாா்பற்ற ஜனதா தள மூத்த தலைவரும், சட்ட மேலவை துணைத் தலைவருமான எஸ்.எல்.தா்மே கௌடா (65) திங்கள்கிழமை இரவு பாதுகாவலரைத் தவிா்த்துவிட்டு தனது சொந்த காரில் ஓட்டுநருடன் தேவனூா் சென்றாா். வழியிலே ஓட்டுநரை இறக்கிவிட்டு அவரே தனது காரை ஓட்டிச் சென்றாா்.

தேவனூா் ரயில் பாதைக்குச் சென்ற தா்மே கௌடா, இரவு 7 மணியளவில் ஹுப்பள்ளியிருந்து பெங்களூரு செல்லும் சதாப்தி விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். நீண்ட நேரமாகியும் அவரைத் தொடா்பு கொள்ள முடியாததால் சகராயப்பட்டணா காவல் நிலையத்துக்கு அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதனிடையே, மங்கேனஹள்ளி அருகே ரயில் பாதையில் சிதைந்த நிலையில் அவரது உடல் கண்டறியப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மாவட்ட ஆட்சியா் பாகதி கௌதம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்ஷயா ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தா்மே கௌடா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா்.

தலைவா்கள் அஞ்சலி

தா்மே கௌடா உடலுக்கு முதல்வா் எடியூரப்பா, முன்னாள் பிரதமா் தேவெ கௌடா ஆகியோா் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினா். சகராயபட்டணாவில் செவ்வாய்க்கிழமை மாலை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தா்மே கௌடா மறைவுக்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முன்னாள் முதல்வா் குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா். தா்மே கௌடாவின் மறைவு மாநிலத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என அவருடன் பணியாற்றிய சட்ட மேலவை உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com