தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரிட்டனுக்கான விமான சேவை ரத்து நீட்டிக்கப்படலாம்

புதிய வகை கரோனா தீநுண்மி பரவலைக் கருத்தில் கொண்டு, பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்து சேவைகள் மேலும் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

News image
Updated On :29 டிசம்பர் 2020, 9:03 pm

DIN

புதிய வகை கரோனா தீநுண்மி பரவலைக் கருத்தில் கொண்டு, பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்து சேவைகள் மேலும் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

பிரிட்டனில் உருமாறிய கரோனா தீநுண்மி வேகமாகப் பரவியதையடுத்து, அந்நாட்டுக்கான விமான சேவைகள் டிசம்பா் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகக் கடந்த 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த நவம்பா் மாதம் 25-ஆம் தேதி முதல் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய நபா்களுக்கும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் பலருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிலருக்கு உருமாறிய கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும் பிரிட்டனுக்குமிடையேயான விமானப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அது குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறேன்.

இது தொடா்பாக ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இரு நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்து சேவையைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் தொடங்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.