இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஹரியாணாவில் தண்ணீரைப் பாய்ச்சி விவசாயிகள் கலைப்பு: பிரியங்கா காந்தி கண்டனம்

விவசாயிகளின் பிரச்னைகளை கேட்பதற்குப் பதிலாக, அவர்களைக் கலைக்க பாஜக அரசு குளிர்காலத்தில் நீர் பீரங்கிகளை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image
ஹரியாணாவில் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீரைப் பாய்ச்சும் காவல்துறையினர்.
Updated On :26 நவம்பர் 2020, 10:39 am

DIN

விவசாயிகளின் பிரச்னைகளை கேட்பதற்குப் பதிலாக, அவர்களைக் கலைக்க பாஜக அரசு குளிர்காலத்தில் நீர் பீரங்கிகளை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம், வணிகம் மேம்படுத்தல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்றுள்ளன. 

தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாய மற்றும் சமூக நல அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அம்பாலாவில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் காவல்துறையினர் நீரை பாய்ச்சி விவசாயிகளை கலைத்தனர். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 

விவசாயப் பொருள்களுக்கான ஆதரவு விலையை பறித்த சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்பதற்குப் பதிலாக, பாஜக அரசு குளிர்காலத்தில் அவர்களைக் கலைக்க நீர் பீரங்கிகளை பயன்படுத்துகிறது.

பெரு நிறுவன முதலாளிகளுக்கு வங்கிக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யும் பாஜக அரசு விவசாயிகளிடமிருந்து அனைத்தையும் பறிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.