/

'மோடி தமது நண்பர்களின் பாக்கெட்டை மட்டுமே நிரப்புகிறார்'

பிரதமர் நரேந்திர மோடி தமது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டை மட்டுமே நிரப்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி (கோப்புப்படம்)
Updated On :17 அக்டோபர் 2020, 8:37 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி தமது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டை மட்டுமே நிரப்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

2020-ஆம் ஆண்டுக்கான உலகலாவிய பசி மிகுந்த நாடுகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த அட்டவணையில் இடம்பிடித்துள்ள 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது. 

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, இந்தியாவின் ஏழை மக்கள் பசியால் வாடுகின்றனர். ஏனெனில் தமது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறார். 

மேலும், பசி மிகுந்த நாடுகளின் பட்டியலில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் (88), நேபாளம் (73), வங்கதேசம் (75) ஆகிய விட இந்தியா பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டும் வரைபடத்தையும் ராகுல்காந்தி இணைத்துள்ளார். 

அட்டவணையில் இந்தியாவிற்கு பிறகு நைஜீரியா (98), ஆப்கானிஸ்தான் (99), லிபியா (102) போன்ற 13 நாடுகள் இடம்பிடித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.